என் பெண்மையை சீண்ட பிடித்திருக்கிறது. என் பார்வை பிடித்திருக்கிறது. என் ஸ்பரிசம் பிடித்திருக்கிறது.
என் முத்தம் மட்டுமல்ல! என் மூச்சும் பிடிக்கிறது! என்னை மூச்சுமுட்ட கட்டிபிடிக்கவும் பிடித்திருக்கிறது.
என் மடி பிடித்திருக்கிறது. என்னை மடியிலமர்த்தி கொஞ்சவும் பிடித்திருக்கிறது. எனக்கு சுமங்கலி என்ற பட்டத்தை தந்த கணவா. சுமங்கலியாக இவ்வுலகம் விட்டு செல்லவே விரும்புகிறேன்.
கும்குமம் எடுத்து நெற்றி வகிட்டில் வைத்து கண்ணாடி பார்த்தேன். கவனம் கண்ணாடியில் இல்லை.
என் மனக்குழப்பங்கள் எல்லாம் என்னை சுழற்றி சுழற்றி போட்டன. ஏதோ இந்த மண்ணில் நான் வாழ்கின்ற கடைசி நாள் போலவே எனக்கு தோன்றியது.
எனக்குள் இருக்கும் சின்ன பெண் இன்றோடு இறந்து விடுவாளோ, நாளையில் இருந்து இன்னொரு உலகத்தில் சுமங்கலி யாக, யாரோ ஒருவருக்கு மருமகளாக, அண்ணியாக பிறப்பேனோ? இது பெண்களுக்கே வந்த சாபமா?
இல்லை இல்லை. எனக்கு வந்த வரம். என்னவன் எனக்கு வந்த வரம்.
மெல்ல யோசனைகளில் இருந்து தெளிந்து, நிகழ்காலத்துக்கு வந்தேன். கண்ணாடியில் என் கண்கள் பார்த்தேன். சிவந்திருந்தது. சூடார குளித்ததனால் கூட இருக்கலாம்.
என்னை பார்க்க எனக்கே வித்தியாசமாக இருந்தது. ஒரு முதிர்ச்சி என் முகத்தில் வந்திருந்தது போல் தோன்றியது. அம்மா சொன்ன முதிர்ச்சி இது தானோ.
பவுடர் எதுவும் போட்டுக்கொள்ளாமல், கண்ணாடியில் இருந்து விலக. அலைபேசியின் சிணுங்கள் மெசேஜ் வந்ததை உணர்த்தியது. மெல்ல நடந்து, தலையணைக்குள் மறைத்து வைத்திருந்த அலைபேசியை எடுத்து பார்த்தேன். என்னவன் மெசேஜ் அனுப்பி இருந்தான்.
“ஹாய். என் செல்ல குட்டி காவ்யா.”
என் முகம் வெட்கத்தில் வெடித்து, சிறு பெண்ணின் முகம் போல் பழயபடி மாற. சத்தம் வராமல் சிரித்தேன்.
“ஹாய்” மட்டும் பதில் அனுப்பினேன்.
கொஞ்ச நேரம் முன் இருந்த முதிர்ச்சியான காவ்யா எங்கேயோ போய் விட்டாள்.
“coffee குடிக்கலாமா?” அவன் அனுப்பியிருந்த பதில், என்னுள் உற்சாக ஊற்றி கிளப்பியது.
“yes” குறுந்தகவலுக்கு குறும்பதில் அனுப்பியிருந்தேன்.
சின்னதாகவே பதில் அனுப்பியிருந்தாலும், அவன் அருகில் இருந்திருந்தால், நானே கட்டிபிடித்து கடிக்குமளவுக்கு காதலுற்றிருந்தேன் என்னவன் மேல்.
“அப்போ என் princess வெளிய வாங்க. உங்க தரிசனத்துக்காக தான் அடியேன் waiting.”
குப்பென என்னிலிருந்து வெடித்த துண்டுகள் சிகப்பு வண்ண heart இன் balloon களாக அறையெங்கும் மிதந்ததை போல் உணர்ந்தேன்.
“coming soon”. அவன் தந்த காதலால் கட்டிலில் புரண்டிருந்த நான். அவசர அவசரமாக அறை வாசலை நோக்கி நடந்தேன்.
திடீரென்று நினைவு வந்தவளாக, கண்ணாடி முன்னால் ஓடி நின்று என் முகம் பார்த்து முடிகளை சரி செய்து, கண் மை வரைந்தேன். லேசாக பவுடர் போட்டு. அறைக்கு வெளியே காலடி எடுத்து வைத்து அவனை தேடினேன். அறைக்கு எதிரிலேயே chair ல் அமர்ந்து சிரித்தவன். ஒன்றை மட்டுமே எனக்கு உணர்த்தினான்.
என் உயிர் சங்கமிக்கும் இடம் அவனென்று.
காதலில் கட்டுண்ட இதயங்களின் பயணம் தொடரும்.
தங்களுடைய கருத்துக்களை அனுப்புங்கள்.