வளையல்கள் சிணுங்க மெல்ல அறை நோக்கி coffee கப்போடு நடந்தேன். கதவை தட்ட, தாள் போடாத கதவு மெல்ல திறந்தது.
உள்ளே எட்டிப்பார்த்தேன்.
“வா காவ்யா” என்றான் மிடுக்கோடு. வேட்டி சட்டை கட்டி கட்டிலில் அமர்ந்திருந்தான்.
எனக்கு பயங்கர ஷாக். என்னடா, எழும்பி குளித்து ready ஆக உக்காந்திருக்கிறானே என்று. முகச்சவரம் செய்து, மிடுக்காக உட்கார்ந்திருந்தவன் கையில், coffee என்று கொடுத்தேன். என் கண்களை பார்த்து சிரித்தான். அந்த சிரிப்புக்கு நான் clean bowled ஆகிட்டேன். எங்கிருந்தோ வந்த வெட்கம் என்னை தொத்திக்கொண்டது. வெட்கத்தில் கன்னம் சிவந்து, மென்மையான ஒரு புன்னகை என் முகத்தில் ஒட்டிக்கொண்டது.
coffee வாங்கிவிட்டு “உக்காருங்க” என்று படுக்கையில் கொஞ்சம் நகர்ந்து அமர்ந்தார்.
எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை: உக்காரலாமா, இல்லை வேண்டாமா என்று. “பரவாயில்லை” என்றேன்.
“இல்ல பரவல்ல, உக்காருங்க” என்றார்.
‘பரவாயில்லை, என்னையும் மதிப்பவன் தான்’ என்று பெருமையாக இருந்தது. ஓரமாக உட்கார்ந்தேன். உங்களுக்கு ஒன்னு வாங்கி வந்திருக்கேன் என்று தன்னுடைய suitcase ஐ திறந்தார்.
ஒரு பெரிய kitkat சாக்லேட்.
“உனக்கு பிடிக்குமே என்று வாங்கினேன்”.
எனக்கோ surprise. இவருக்கு எப்படி தெரியும் என்று.
கையில் வாங்கியபின் மெல்ல கேட்டேன், “உங்களுக்கு எப்படி தெரியும்?”
விடை தெரிய அவர் கண்களை கூர்ந்து நோக்கினேன்.
“பொண்ணு பாக்க வந்தப்போ உங்க வீட்ல kitkat கவர் தான் நிறைய இருந்திச்சு”
கேட்டதும், பக் என்று சிரித்து விட்டேன்.
மெல்லிய புன்னகையோடு, “உன்ன பத்தி தெரிஞ்சி வச்சிக்ரதுல தப்பில்லல்ல” என்றார்.
எனக்கு மனம் நிறைய சந்தோஷமும் காதலும் பெருகி வழிந்தது. அப்போதே அவன் கன்னத்தில் ஒரு மெல்லிய முத்தம் கொடுக்க தோன்றியது.
தங்களுடைய கருத்துக்களை [email protected] அனுப்புங்கள்.
“உங்களுக்கு என்ன சாக்லேட் பிடிக்கும்?” மென்மையாக குரல் நடுங்க கேட்டேன். காதல் ஜுரம் ஆக இருக்கலாம். குளிர துவங்கியது.
“எனக்கும் kitkat தான்”, கண்களை பார்த்து புன்னகைத்தான்.
“same pinch” என்றேன் சிரித்துக்கொண்டே.
“எங்கே கிள்ளவே இல்ல” என்றார் சிரித்துக்கொண்டே.
இருவரும் விழுந்து விழுந்து சிரித்தோம்.
மனதுக்குள், “எனக்காக பிறந்தவனே, பேரழகா… ” என்று பாட்டு ஓடியது.
எனக்கு திடீர் என்று தோன்ற, அவர் தந்த kitkat ஐ பிரித்து, பாதி முறித்து அவரிடமே தந்தேன். இருவரும், சிரித்துக்கொண்டே சாப்பிட்டோம்.
“காவ்யா…” அம்மா அழைத்தாள்.
“வந்துட்டேன் மா…” பதிலுரைத்தேன்.
“கோயில் போக நீங்க ready ஆ”.. மனம் ஏனோ குதூகலித்தது… பதில் தெரிந்தும் கேள்வி கேட்டேன்.
“Ready..” மீண்டும் புன்னகைத்து, என் முகத்தில் வெட்கப்புன்னகை படரவிட்டான்.
….
நண்பர்களே… இது என் சொந்த அனுபவம் ஆதலால்… நான் ரசித்து அனுபவித்த விஷயங்களை நீங்களும் ரசித்து அனுபவிக்கவே நினைக்கிறேன்… இந்த கதை பல பாகங்களாக எழுதுவேன் என்பதை அன்புடன் தெரிவித்து கொள்கிறேன்.
Hi Friends தங்களுடைய கருத்துக்களை அனுப்புங்கள்.