கனா கண்டேனடா – 4 Like

“ஒரு நிமிஷம் வந்திடுறேன் பா” ஓடிசென்று முகத்தை கண்ணாடியில் பார்த்து, சாமி பக்கத்தில் இருந்த செந்தூரத்தை வைத்துக்கொண்டேன். போட்டு வைத்து. அம்மா வாங்கி வைத்திருந்த பூவை சூடிக்கொண்டேன்.
அவர் முன்னே நடக்க, நான் பவ்யமாக பின்னே நடந்தேன்.

பைக் ஐ ஸ்டார்ட் பண்ணி என் கண்ணை பார்த்தார், அவர் பார்வையிலேயே செத்துபோய் மறுஜென்மம் எடுத்தது போல் இருந்தது. purse ஐ மடியில் வைத்து, ஒருபக்கமாக அமர்ந்து, எங்கே பிடிப்பது என்று பார்த்தேன். அவர் இடுப்பிலேயே வளைத்து பிடிக்கலாமா என்று தோன்றியது. இல்லை தோளில் பிடிக்கலாமா. இறுதியில் பைக் பிடியிலேயே பிடித்துக்கொண்டேன்.

ஊர் எல்லையை தாண்டியதும், மெல்ல அவர் தோளில் கை வைத்தேன். ‘மனுஷன் எப்டி பீல் பண்றார்’ என்று கண்ணாடி வழியாக பார்த்தேன். முகமெல்லாம் சந்தோஷமும் வெட்கமும். ‘தன்னை பார்த்து சந்தோஷமும் வெட்கமும் படும் கணவர் இருக்கும் எந்த பெண்ணுமே பாக்யசாலி தான்’. ஒரு கர்வம் தோன்றி மறைந்தது.
ஆண்களுக்கான துணிக்கடைக்கு அழைத்து சென்றேன். அவர் எனக்கு வாங்கித்தந்த பட்டு சேலைக்கு matching ஆக ஒரு பட்டு சட்டை வாங்கினேன்.. “பிடிச்சிருக்கா?” அவர் கண்களை பார்த்து கேட்டேன். அவர் முகத்தில் சிரிப்பு. “பிடிச்சிருக்கு”.. சிரித்தார்.. “இதுக்குதான் கூட்டிட்டு வந்தியா?”

நான் புன்னகையே பதிலாக தந்தேன்.
திரும்பி வந்துகொண்டிருந்தோம்
“உனக்கு எதுவுமே வாங்கலையே” என்றார்.
“அதான், saree வாங்கி தந்தீங்களே…”
புன்னகைத்தார்..
“நீங்க சிரிச்சா அழகா இருக்கீங்க” ….”அப்பப்போ சிரிங்க”
“ஹா…” என்று வாய் விட்டு சிரித்தார்..

“ஹே சத்தம் போடாதீங்க…” என்று தோளில் பிடித்திருந்த கையாலேயே தோளில் கிள்ள..
“ஆ…” என்றார்.
“ஹே sorry pa sorry pa” என்றேன்.

திரும்ப பவ்யமாக… பூனைக்குட்டி போல் அவர் பின்னாலேயே நடந்தேன்… இந்த பூனையும் பால் குடிக்குமா என்பது போல் கிண்டலாக பார்வை வீச.. நான் விட்டதில் ஓடிய fan ஐ பார்த்து சிரிக்க. இருவரும் மகிழ்ச்சியாக. அவரவர் அறைக்குள் சென்றோம்.
ஆனந்தமாக ஒரு குளியல் போட bathroom க்குள் சென்றேன்..

உடைகளை களைந்து, வெற்றுடம்புடன் குளிர்ந்த shower ல் நிற்க.. என் மேனி பூ போல் பூத்துக்குலுங்கியது போல் உணர்ந்தேன். பூவில் விழும் பனித்துளி போல், என் மேனியில் விழுந்த நீர்த்துளிகள், விழ மனமில்லாமல் ஒட்டி இருந்தன.
புது nighty ம் உள்ளாடைகளும் அணிந்து கொண்டு. இரவு உணவு சாப்பிட போனோம். அவர் track pants அணிந்திருந்தார். எதேச்சையாக அமர்வதுபோல், பேசிக்கொண்டே அவர் அருகில் அமர்ந்துகொண்டேன். குளிர்ந்த நீரில் குளித்ததாலோ இல்லை அவர் அருகில் அமர்ந்திருப்பதாலோ, என் மேனியெங்கும் மயிர் கூச்செறிந்தது. அவ்வப்போது என்ன சாப்பிடுகிறார் எப்படி சாப்பிடுகிறார் என்ன்று அவர் தட்டையும் பார்த்துக்கொள்வேன். அப்படியாக சாப்பிட்டு கை கழுவி முடித்தும் அவர் பக்கத்திலிருந்து எழும்ப மனமில்லை.

இந்த சம்ப்ரதாயம் எல்லாம் இல்லாமல் இருந்திருந்தால், எங்களை யாராலும் பிரித்து வைத்திருக்க முடியாதே என்று தோன்றியது.

எல்லாரும் தூங்க செல்லலாம் என்று எழும்ப, குட் நைட் காவ்யா என்று சொல்லி கையில் ஒரு பாக்ஸ் ஐ திணித்து செய்கை காட்டினான். நானும் கையில் மூடி வைத்துக்கொண்டு அறைக்குள் சென்று பார்த்தேன். ஒரு அழகான வெள்ளிக்கொலுசு. ‘இப்போதே காலில் அணிந்து கொள்ளலாமா’ என்று யோசித்தேன்… ‘அம்மா ஏதென்று கேட்பாள், இப்போ வேண்டாம்’ என்று தோன்றியது.

செல்போன் ல் மெசேஜ் வந்தது. “குட் நைட் சிரிப்பழகி” வெட்கம் என்னை பிடுங்கி தின்றது.
“குட் நைட் சிரிப்பழகா” என்று பதில் அனுப்பினேன்.
“ஐ லவ் யு சிரிப்பழகி ”… பார்த்ததும்.. மனசுக்குள் ஆயிரம் கலர் கலர் பட்டாம்பூச்சிகள்… வெட்கத்தில் கன்னம் பெரிதாகி வலித்தது…

பக்கத்தில் படுத்திருந்த அம்மா முகத்தில் வெளிச்சம் விழாமலிருக்க. ஒருக்களித்து படுத்தேன்.
nighty க்குள் மார்பை குத்திய தாலியை வெளியே எடுத்து போட்டேன். தாலியை பார்க்க பார்க்க எனக்கு அவன் மேல் அன்பு பெருக்கெடுத்து. தாலியை எடுத்து கண்களில் ஒற்றிக்கொண்டேன்.
அவர் அனுப்பிய மெசேஜ் வந்து மூன்று நிமிடங்கள் ஆகியிருந்தன.
சந்தோஷமாக பதில் அனுப்பினேன், “ஐ லவ் யு சிரிப்பழகா”…
“தூங்கிட்டியா” என்றார்.

“இல்லை படுத்திருக்கேன்” என்றேன்.
“சரி ஓகே குட் நைட்.” என்றார்.
“எப்போ எழும்புவீங்க” என்றேன்..
“5.3o க்கு ”

நாளை காலை அவருக்கு surprise கொடுக்கவேண்டும் என்று முடிவெடுத்தேன்..
அனால் கடவுள் அதற்கும் மேலே எழுதி வைத்திருப்பார் என்று அந்த இரவில் எனக்கு தெரியவில்லை.

நண்பர்களே… இது என் சொந்த அனுபவம் ஆதலால்… நான் ரசித்து அனுபவித்த விஷயங்களை நீங்களும் ரசித்து அனுபவிக்கவே நினைக்கிறேன்… இந்த கதை பல பாகங்களாக எழுதுவேன் என்பதை அன்புடன் தெரிவித்து கொள்கிறேன்.

தங்களுடைய கருத்துக்களை அனுப்புங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *