ஐந்து நிமிடத்தில், போட்டு சுவை பார்த்தேன். இனிப்பு சரியாக இருக்கும் என்கிற நம்பிக்கையில் மாடிப்படி ஏறி அவர் அறையில் எட்டிப்பார்க்க, அவர் ஜன்னல் வழியாக வெளியே பார்த்தபடி நின்று கொண்டிருந்தார்.
“ஹ்ம்ம் ம்ம்…” தொண்டையை செருமினேன்..
என்னை பார்த்து சிரித்தார். “வா காவ்யா… உன்னை பாக்கணும் போல இருந்திச்சா அதான் டீ கேட்டேன்” என்றார் குறும்பாக.
“அடப்பாவி…” வாயில் கை பொத்தி சிரித்தேன்… “நாளன்னிலேருந்து எப்போ வேணா பாக்கலாம்.. சரியா..”
என்னையுமறியாமல் அவன் மேலிருந்த உரிமையில் வார்த்தைகள் ஒருமையாய் மாறியிருந்தன.
“அப்படியா… ” அவர் முகம் வாடியது
“அப்போ டீ வேண்டாமா…?” வேண்டுமென்றே topic ஐ மாற்றினேன். என் காதலனை கட்டுக்குள் வைக்கவில்லை என்றால். எனக்கல்லவோ danger…
“வா குடிக்கலாம்…” சிரித்தார்..
ஒரு சிப் அருந்தி, கையில் கப் ஐ தந்தார். நானும் ஒரு சிப் அருந்தினேன்…
“ஆமா, காலைல பண்ணின கட்டிப்பிடி வைத்தியம் பிடிச்சிருந்துச்சா?” குறும்பாக சிரித்துக்கொண்டே கேட்டான்.
அவன் கேட்டதும் எனக்கு வெட்கம் தாளவில்லை… முகம் மலர.. முப்பத்திரண்டு பல்லும் தெரிந்தது. முகம் மறைக்க என்னிடம் சேலை தலைப்பும் இல்லை துப்பட்டாவும் இல்லை.. என்னால் முடிந்தது என் இடது கையால் என் முப்பத்திரண்டு பல்லையும் மறைப்பது மட்டுமே.
ஆதரவாக தோளில் கை வைத்தான்.. அவன் ஆள்காட்டி விரல் என் தோளின் nighty மூடாத பாகத்தில் எதேச்சையாக உரச, என் உடல் சிலிர்த்து விம்மியது. என் கண்களை பார்த்து சிரித்தான்..
‘ஏன் டா என்னை சிரித்து சிரித்து out ஆக்குகிறாய்’ என்று மனதில் தோன்றியது.
நான் comfortable ஆக இல்லை என்பதை புரிந்த அவன், “வா.. கொஞ்சம் நேரம் உக்காந்துக்கலாம்..” என்று என் கைகளை கோர்த்து அமர வைத்தான்.
நான் கொஞ்சம் ஆசுவாசம் ஆனதும், கோர்த்துக்கொண்ட கைகளை விலக்காமலே கேட்டான், “நான் ஒன்னு கேட்டேனே?”…
“வலிச்சுது….” அவன் முகம் பார்க்க வெட்கம் அனுமதிக்கவில்லை என்றாலும், என் வலிக்கு அவன் எப்படி எதிர்வினையாற்றுகிறான் என்று பார்க்க ஆவலாய் ஓரக்கண்ணில் பார்க்க, ஒரு கணம் அவன் திகைத்து அதிர்ந்து போனதை உணர முடிந்தது. எனக்கு வலித்தததை பார்த்து அவன் feel செய்வது தெரிந்தது.
அவன் feel பண்ணுவதை பார்த்து, ‘சொல்லியிருக்க வேண்டாமோ ?’ என்று தோன்றியது.
ஒரு இரண்டு நொடி கடந்திருக்கும்… குரல் செருமினான்.. “ஒரு sorry.. ஒரு thanks..”
“எதுக்கு?”
“sorry.. உன்ன வலிக்கிற மாதிரி கட்டிபிடிச்சதுக்கு…”.. “thanks.. நீ அதை மனச விட்டு comfortable ஆ என்கிட்ட சொன்னதுக்கு..”
நான் முகம் மலர்ந்தேன்… என்னவரின் மேல் மரியாதை கூடியது.. ‘எந்த வீட்டில் கணவனும் மனைவியும் sorry ம் thanks ம் சொல்லி பழகுகிறார்களோ, அந்த வீடு தான் சொர்க்கம்’ என்று எங்கேயோ வாசித்த நினைவு.
“hey.. அது பரவால பா”… நான் அவனை comfortable ஆக்க.. கோர்த்திருந்த கைகளை இறுக்கினேன்…
அவன் முகத்தில் புன்முறுவல், ‘இது போதும் எனக்கு’ என்று தோன்றியது…
எந்திரிக்க மனமில்லாமல் கட்டிலை விட்டு எந்திரிக்க.. கேட்டான்.. “சரி.. வலிக்காம ஒரு தடவ கட்டிபிடிசுக்கலாமா?”
எனக்கு சிரிப்பு தாளவில்லை… “வேண்டாம்.. வேண்டாம்..” சிரித்துக்கொண்டே சொன்னேன்..
“ஒரே ஒரு தடவ செல்லம்…” கொஞ்சி கெஞ்சினான்.
அவன் அப்படி சொன்னது பிடித்திருந்தது.. மட்டுமல்ல, எனக்கும் அப்போது ஒரு அணைப்பு தேவைப்பட்டது.
“சரி.. ஒரே ஒரு தடவ…” பொய் சொன்னேன்…
மெல்ல இழுத்து மடியில் அமர வைத்தான்.. நான் பதறி எழும்பினேன்.. “அய்யய்யோ”
“என்ன மா”
“நான் போறேன்”.. குறும்பாக அவன் கண்களை பார்த்து சொன்னேன்..
“hey sorry sorry..” என் கைகளை கோர்த்தான்
‘நான் கோவமா கெளம்புறேன்’ style ல், கோர்த்துக்கொண்ட அவன் கைகளையும் விடாமல், அந்த இடத்தை விட்டும் நகராமல் நின்றேன்.
இந்த கணத்தில் அவன் அணைப்பு எனக்கு கண்டிப்பாக தேவைப்பட்டது.
அவன் மெல்ல படுக்கையிலிருந்து எழுந்து என்னை அணைக்க, நான் கண்களை மூடிக்கொண்டேன்.
ஒரு புறாவை கைகளில் பொத்திப்பிடிப்பது போல, என்னை மென்மையாக அணைத்திருந்தான். மென்மையான அழுத்தம். ஒவ்வொரு பருவமடைந்த பெண்ணும் அவள் கணவனிடம் கிடைக்க ஏங்கும் அணைப்பு இது. அவன் வலது கை என் இடது காதை மென்மையாக தடவி பிடிக்க.. என் உடல் திடீரென்று கண்டடைந்த இன்பத்தில் இனி என்னென்ன இருக்குமோ என்று ஏக்கத்திலும் கேள்வியிலும் லயித்திருக்க… மென்மையான என் இடக்கன்னத்தில்.. “இச்….” மீண்டும் உடல் அதிர்ந்து வெட்டியது. கால்கள் வலுவிழக்க, அவன் மேலேயே சாய்ந்துகொண்டேன். என் மார்புக்கூடுகள் அவன் நெஞ்சில் மென்மையான அழுத்தம் தர, அவன் உதடு nighty மறைக்காத தோள் பாகத்தில் பட.. உடல் மீண்டும் வெட்டி அதிர்ந்தது.
“காவ்யா…” கீழிருந்த அம்மா அழைக்க..
“ஐயோ …” என்று நான் சுயநினைவுக்கு வந்து விலகினேன்..
கண்ணாடியில் முகம் பார்த்து தலைமுடியை சரி செய்தேன், முகம் வியர்த்திருந்தது…
கண்ணாடியில் அவன் என் முகத்தை ஏக்கத்தோடு பார்க்க..
நான்.. “போயிட்டு வரேன்.. bye” என்று சொல்லி குறும்பாக அவன் வயிற்றில் ஒரு கிள்ளு கிள்ளிவிட்டு ஓடினேன்…
அவன் “ஆ…” என்று அலற.. வாசல் சென்று அவனை திரும்பி பார்த்து சிரித்தேன்.. ‘bye’ சன்னமாக சொல்லிவிட்டு கீழே இறங்கினேன்…
கன்னிக்கு கிடைக்கும் முதல் முத்தம் எப்போதுமே சுவையானது…. வாழ்வில் மறக்கவே முடியாதது.
எங்களை அறியாமலேயே நாங்கள் முதலிரவுக்கு தயாராகிக்கொண்டிருந்தோம்…