கனா கண்டேனடா – 7 Like

நான் பைக் ல் ஒரு பக்கமாக கால் போட்டு அமர.. மெல்ல பைக் ஐ கிளப்பினார். அவர் இடது தோளில் பிடித்துக்கொண்டேன்.

திருமணம் முடிந்த இந்த நாட்களில் பல விஷயங்கள் எங்களுக்குள் மாறியிருந்தது. அவரை கண்டதும் படபடக்கும் இதயம் இப்போது இல்லை. மாறாக படபடத்துக்கொண்டிருக்கும் இதயம் அவரைக்கண்டதும் சீராகிறது. அவரைக்கண்டால் பயம் இல்லை. மாறாக தைரியம் வருகிறது. அவர் விரல் பட்டால் துடிக்கும் உடல் இல்லை. அவர் தீண்டலுக்காக எங்கும் உடலாக மாறியிருந்தது. அவர் என்னவர் என்கிற உரிமை உறுதியாக இருந்தது. அவர் கண்ணைப்பார்த்ததும் clean bowled ஆகும் காவ்யா இல்லை. அவர் கண்ணை ஆசையுடன் ரசிக்கும் காவ்யா நான்.
தோப்பு வந்தது..

சுப்பிரமணி மாமா தான் தோப்பிலேயே தங்கி தோப்பை பார்த்துக்கொள்கிறார்…
எங்களுக்காக காத்திருந்தார்.. அப்பா சொல்லியிருக்கலாம்..
“வாம்மா … இளநீர் வெட்டி வெச்சிருக்கேன்..” இளநீரை நீட்டினார். நானும் அவரும் ஆளுக்கொன்று வாங்கிக்கொண்டோம். மாந்தோப்பில் அங்கங்கே தென்னை நட்டு வைத்திருந்தோம்.
தொப்பினூடாக மெல்ல நடந்தோம். season இல்லாததால், மாமரங்கள் பூவிட்டிருந்தன.
“நீங்க சுத்திப்பாருங்க மா, என்ன வேணும்னாலும் ஒரு குரல் கொடுங்க ” என்றார்.
“சரிங்க மாமா” என்று விட்டு இருவரும் மெல்ல நடந்தோம்.

ஒரு பத்துமரம் தாண்டியிருப்போம். நாங்கள் பேசுவது வேறுயாருக்கும் கேட்காது என்பதை உறுதிப்படுத்திக்கொண்டேன். சுப்ரமணி மாமா வும் கண்ணுக்கெட்டிய தூரத்தில் இல்லை.
அவரை பார்த்தேன். பக்கத்தில் பொண்டாட்டி இருப்பது கூட தெரியாமல் சிரத்தையாக தரையில் பார்த்து நடந்தார் மனுஷன்.

“என்னையும் கொஞ்சம் பாத்து கூட்டிட்டு போங்க” என்று அவர் கைகளை பிடித்துக்கொண்டேன்.
“வா காவ்யா” என்று என் கைகளை பிடித்துக்கொண்டு கவனமாக தரையில் பார்த்து நடந்தார்.
‘என்னையும் கொஞ்சம் பார்த்து’ என்று நான் அடிக்கொடிட்டதை மனுஷன் புரிந்துகொள்ளவில்லை என்பது புரிந்தது.

‘இந்த ஆம்பளைங்களே இப்படி தானோ. பார்த்து தான் புரிந்துகொள்ளவில்லை. நான் சொன்னதையாவது கொஞ்சம் கவனமாக கவனித்திருக்கலாமல்லவா?’
என்ன செய்வது என்று யோசித்தேன். “இங்க உக்காரலாம?” கிளையை கீழேயே பரப்பிய ஒரு மாமரத்தை பார்த்துக்கேட்டேன்.

“ஹ்ம்ம்.. வா” நானும் அவரும் அமர கிளையை kerchief ஆல் தூசி தட்டினார்.
‘இதுக்கொண்ணும் கொறைச்சல் இல்லை’ ‘ஒரு பெண்ணை புரிந்துகொள்ளாத என்ன மனுஷன் யா’ என்று தோன்றியது. மறுபுறம், ‘எந்த பெண்ணையும் அறிந்திறாதவரல்லவா என்னவர் ’ என்று பெருமிதம் கொண்டேன்.
‘அமர்ந்தாயிற்று.. இனி கொஞ்சம் கைகளை கோர்த்துக்கொள்ளலாமே’ என்று என் கைகளை அவன் கைகளின் அருகில் வைத்தேன்.. இதுவும் அவனுக்கு புரியவில்லை.

சரி பேசித்தான் பார்க்கவேண்டும் என்று ஆரம்பித்தேன்.
“எதுக்கு கோவமா? ன்னு கேட்டீங்க மெசேஜ் ல”
“தோணிச்சு”
இன்று அவருடன் மனம்விட்டு பேசுவது என்று முடிவெடுத்தேன்.
“கொஞ்சம் கோவம் தான்”, “but கோவமா கவலையா ன்னு எனக்கே தெரியல..”
“புரியல மா” குழப்பத்துடன் என்னைப்பார்த்தார்.
கண்டிப்பாக புரிந்திருக்காது என்பது எனக்கு தெரியும்..

“கோவம் என் மேல.. கவலை உங்க மேல..”
“காவ்யா…” கைகளை பிடித்துக்கொண்டார்..
அவர் ஆதரவாக கைகளை பற்றிக்கொண்டதும், என் கண்களில் நீர் முட்டியது.
“நான் ஏதாவது தப்பா பண்ணிட்டனா காவ்யா?”
“அடிக்கடி black டீ கேக்குறீங்களே..” கண்களில் வந்த கண்ணீரை அடக்கிகொண்டே வெட்கத்தில் சிரித்தேன். இதைவிட இலைமறைகாயாக எனக்கு சொல்லதெரியவில்லை.
பக்கென்று சிரித்து கைகளை இறுக்கினார்.

“இல்லப்பா நான் serious ஆ சொல்றேன்..” “உங்களை எனக்கு அவ்ளோ பிடிக்கும்.. அதனால நீங்க கேட்டா முடியாது ன்னு என்னால சொல்லமுடியாது… but உங்களை இந்த நிலமைக்கு ஆளாக்கினது நானோ ன்னு ஒரு குற்ற உணர்வு..” வெடுக்கென்று அவன் அவன் அணைத்த அணைப்பு என்னை தடுமாற வைத்தது. குளமாகியிருந்த கண்கள் அதன் நீரை என்னவன் T-shirt ல் நனைக்க, நானும் அவனை கட்டிக்கொண்டேன்.
“நீ என் உயிரு காவ்யா” கட்டிக்கொண்டே அவன் கண்களை பார்த்தேன்.. “உன்ன பிரிஞ்சு ஒரு நிமிஷம் கூட என்னால இருக்கமுடியல, அதான் உன்ன பாக்க அது இது ன்னு சாக்கு சொள்ளவேண்டியதாயிடிச்சு…”
அவன் சொன்னதை கேட்டதும்..‘இவனுக்காக உயிர்கூட தரலாம்’ என்று தோன்றியது.
எனக்கு பட்டென்று கோயிலுக்கு போகவேண்டும் என்று தோன்ற… “கோயிலுக்கு போலாமா?” என்று கேட்டேன்…
“போலாமே…” என்றான் என் கணவன்..

மெல்ல இருட்ட ஆரம்பித்திருந்தது… நல்ல வேளையாக சுப்பிரமணி மாமா அங்கு எங்குமே தென்பட வில்லை. ஆதரவாக என் கைகளை பிடித்து மெல்ல அழைத்து சென்றார். மாமா வெளியில் நின்றுகொண்டிருந்தார். “கெளம்பிட்டீங்களா மா..” என்றார்..
“ஆமா மாமா..”

“சரி மா.. பாத்து போயிட்டுவாங்க” வழியனுப்பினார்..
பைக் ல் ஏறி அமர்ந்து அவருக்கு வழிகாட்டினேன்..
கோயில் வந்ததும்… நடை சாத்துவதற்குள் அவசரமாக பூஜை பொருட்கள் வாங்கி சென்றோம்.
பூஜை முடிந்து மெல்ல கோயிலை சுற்றி வந்தோம்..
“என்ன வேண்டிக்கிடீங்க?” சிரித்துக்கொண்டே கேட்டேன்..

“எத்தன ஜென்மம் எடுத்தாலும், நீ எனக்கு மட்டுமே கெடைக்கணும் ன்னு வேண்டிக்கிட்டேன்..”
“ஆஹா..” மனம் குளிர்ந்து..
வெளியில் வந்தோம்… “பூ வாங்கிதரீன்களா…?” ஆசையாக கேட்டேன்..
பூ வாங்கி தலையில் சூடிவிட்டான்…

‘வாழ்ந்தால் இவனோடு தான் வாழவேண்டும்… சுமந்தால் இவன் பிள்ளையை தான் சுமக்கவேண்டும்’ மனம் சொன்னது…
ஆசையாக பைக் ல் ஏறி புறப்பட்டோம்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *