அந்த பொண்ணை முதலே தெரியுமானு கேட்டார் நான் ஆமானு சொல்ல அவ டக்குனு இல்லனு சொன்னாள்.எல்லாரும் சிரிச்சாங்க வேற ஏதோ இருக்கும்போல உனக்கு எப்படி தெரியும்னு சொன்னா தான் விடுவனு சொல்லிட்டார்.அதை எப்படிடா சொல்லறதுனு மௌனமாக இருந்தேன் அவளை கேட்டார் கவுன்ஸிலிங் அப்ப தெரியும்னு சொன்னாள்.
முதல்ல தெரியாதுனு ஏன் சொன்னானு கேட்டார் அமைதியாக இருந்தாள். பிரெண்டுனு சொன்னாள் பிரெண்டா இருந்தால் நான் கேட்ட போதே என் பிரெண்டுனு சொல்லி இருக்கலாமே என் சொல்லவில்லைனு கேட்டார்.லவ் பண்ணிறங்கலானு கேட்டார் அமைதியாக இருந்தோம் மொத்த கிளாஸே அமைதியாக நாங்க என்ன சொல்லபோறனு எங்க முஞ்சியே பார்த்துட்டு இருந்தாங்க.
நான் ஆமானு சொன்னேன் எல்லாம் ஏஏனு கத்தினாங்க சரி உட்காருங்கனு சொல்லிட்டார்.எங்கடா இருந்து வந்த இதுக்காட வேலை செய்யறனு தலையிலே அடிச்சிக்க என்னை பார்த்து சிரித்தாள். திரும்ப சிரிக்காத கம்முனு இருனு சொல்லிட்டு திரும்ப சார் எங்களையே பார்த்துட்டு இருந்தார் அடப்போங்கடானு பென்ஜில் படுத்துவிட்டேன்.
மதியம் லன்ச் அவ்வர் வந்துச்சி சாப்பிட கேன்டினுக்கு போனேன்.அவளும் வந்தாள் டேய் வேற எதனா சொல்லி சமாளிச்சி இருக்கலாம்லா ஏன்டா லவர்னு சொன்னனு கேட்டாள்.அதற்குள் எங்க கிளாஸ் பசங்க பார்த்துட்டு ஹம் ஹம் என்ஜாய் னு சொல்லி போனாங்க.இனிமேல் நாலு வருசத்துக்கு நம்ம லவர் தான் போலனு புலம்பினாள்.
இனி சிரிக்கவே தான் இவ்வளோ தூரம் வந்துச்சினு சொன்னேன்.நீ வேற ஏன்டா விடுறா சரிவா சாப்பிட போலாம்னு ஒரே டேபிள்ள உட்காந்து சாப்பிட்டு இருந்தோம். அந்த சாறூம் வந்தாரு போசச்சிடா அய்யோனு ஹம்னு சினுங்கினாள்.என்னனு கேட்டேன் சார் வந்து பக்கத்தில் உட்காந்தார் எனக்கு பொறக்கயே ஏறிடுச்சி இந்தானு தண்ணி குடுத்தாள்.
ஹம் ஹம்னு சொல்லிட்டு எழுந்து போய்ட்டார்.தமிழு இவன் ஒரு ஆளு போதும் நம்ம வீட்டுல சொல்லி கல்யாண பண்ணி வச்சிடுவான்போலானு சொன்னேன்.உன்னலாம் கட்டிக்க மாட்டேன் போடானு சொன்னாள்.
ஆமா நீ யாரான லவ் பண்றியானு கேட்டேன் அதெல்லாம் உன்கிட்ட சொல்ல வேண்டிய அவசியமில்லை. சும்மா பேசுறதோட நிறுத்திக்கோ இதெல்லாம் உனக்கு தேவை இல்லனு எழுந்து போய்ட்டாள்.
மதியம் லேபுக்கு போனோம் அதே சாருதான் எங்க இரண்டு பேறு அப்புறம் ஒரு பொண்ணு மூனு பேரையும் ஒரே பேட்சா பிரிச்சிவிட்டார்.தெரிஞ்ச பொண்ணுதானு கேட்டுடேன் இத்தொட எதான கேட்டா செருப்பாளே அடினு சொன்னேன். அமைதியாக இருந்தாள் சாய்ங்காலம் காலேஜ் முடிச்சிட்டு இரண்டு பேரும் ஒன்னதான் டரையின்ல போகனும்.
அவளை பார்த்துட்டு திரும்பிகிட்டேன் கிட்ட வந்து சாரிடா நான் கடுப்புள அப்படி சொல்லிட்டேன்.கொச்சிகாத இனிமேல் அப்படி பேசமாட்டேனு சொன்னாள். ஆமா நீ யாரான லவ் பண்றியானு கேட்டேன் முறைத்தாள் சிறிது நேரம் கழித்து சிரித்தாள். இல்லடா லவ்லாம் ஒன்னுமில்லை நீ டானு கேட்டாள் இதுவர இல்லை இனிமேல் எப்படினு தெரியலனு சொன்னேன்.
இனிமேல் நம்ம பிரெண்ஸ்னு கைய குடுத்தாள் நானும் என் முதல் கேர்ள் பிரெண்டுனு சொன்னேன். இறங்க வேண்டிய இறங்கினோம் அவள் அங்கு இருந்து பஸ்ஸில் வீட்டிற்கு செல்வாள் நான் அதே ஊருதான். வீட்டிற்கு சென்று அவளை முதல் பார்த்தது இருந்து இப்பவரை நடந்ததை நினைத்து தனியாக சிரித்தேன். இப்படியே காலேஜ் டு இரயில் நிலையம்னு இரண்டு மாதம்போனாது.அதுவரை அவள் மீது எந்த எண்ணமும் தோன்றவில்லை.
இரண்டு மாதத்திற்கு பிறகு….
இக்கதையின் உங்கள் கருத்துகளை கமெண்ட் செய்யுங்கள். மேலும் எனது கதைகளுக்கு இதுவரை ஆதரவு நல்கிய அனைவருக்கும் நன்றி .தொடர்புக்கு