அப்போது கணவர் விரக்தியோடு, “காலேஜ்ல அவனை விரும்பாத பொண்ணுங்களை கிடையாது. ஆனா அவன் சுதாவை மட்டும் தான் லவ் பண்ணான். அவளும் லவ் பண்ணா. ரெண்டு பேரும் இணைபிரியாக காதலர்களா பறந்து திரிஞ்சாங்க. ஆனா சுதா வீட்ல கல்யாணத்துக்கு ஒத்துக்கல. பொண்ணை தூக்கிடலாம்னு நான் சொல்லியும் அரவிந்த் கேட்கல. அதுக்குல்ல சுதாவை மாப்பிள்ளை ஊருக்கே கூட்டிட்டு போய் உறவு பையனை கல்யாணம் செய்து வைக்க முயற்சி பண்ணப்போ, அவங்க வீட்டு பின்னாடி இருந்த கிணற்றுக்குள்ள விழுந்து தற்கொலை பண்ணிகிட்டா. அந்த சோகம் தான் அரவிந்தையும் ரொம்பவே பாதிச்சிடுச்சு.
அப்போ நாங்க ரெண்டு பேரும் படிச்சிட்டு வேலை கிடைக்காம, ஒரு டிரான்ஸ்போர்ட் கம்பெனியில மானேஜர்ஸா இருந்தோம். அரவிந்த் அப்புறம் வேலைக்கு போக பிடிக்காம ரூமுக்குள்ளயே முடங்கிட்டான். எனக்கும் அவனுக்க எப்படி ஆறுதல் சொல்றதுனு தெரியல. அதுக்கப்புறம் தான் நான் வேலைய விட்டுட்டு, டிராவல்ஸ் கம்பெனி ஆரம்பிச்சேன். அரவிந்தோட மனசு மாற அவனை ஆபீஸுக்கு கூட்டிட்டு வந்தேன். தொழில் நடக்கிற இடத்துல நாலு பேரு வந்து போக, பேசி, பழகி அரவிந்த் கொஞ்சம் கொஞ்சமா நார்மல் ஆகி, பழைய அரவிந்தா மாறினான்.
அந்த டைம்ல நானும் அவங்க வீட்லேயும் சேர்ந்து அவன்கிட்டே கூட சொல்லாம ஒரு பொண்ணை பார்த்துட்டு வந்து போட்டோவை காட்டினோம். அதை பார்த்த அவன் செம டென்ஷனாகி, அந்த பொண்ணு படத்தை கிழிச்சு போட்டுட்டு, இனிமே இது மாதிரிலாம் முடிவெடுத்தீங்க. என்னை மொத்தமா மறந்திடுங்கனு சொல்லிட்டு, மறுபடியும் விரக்தியோட சுத்த ஆரம்பிச்சுட்டான் அப்புறம் தான் நாங்க அவன் கல்யாணத்தை பத்தி பேசுறதை நிறுத்தினோம். இப்போ வரைக்கும் அவன்கிட்டே அது பத்தி மட்டும் பேசினதே இல்ல.
இதெல்லாம் உன்கிட்டே என் சொல்றேன்னா, நீ டெய்லி அவனை பார்க்குறே, அண்ணா, அண்ணானு அன்பா பேசுற, சாப்பாடு போடுறே. ஆனா அவன் கிட்டே இந்த மேட்டரை மட்டும் கேட்காதே. அப்புறம் கோபப்பட்டு நம்ப வீட்டுக்கும் வரமாட்டான். மறுபடியும் மறந்து போன விஷயங்கள் அவன் மனசுக்குள்ள வந்து ரொம்ப கஷ்டபடுவான். அதனால கல்யாண மேட்டரை அவன்கிட்டே கேட்டுடாதே..“ என்ற வார்னிங்கோடு அரவிந்த் அண்ணாவின் சோகக்கதையை என் கணவர் சொல்லி முடித்தார்.
ஆனால் அரவிந்த் ரொம்ப அன்பா பேசி பழகுவார். வீட்டுக்கு வந்தா ரொம்ப உரிமையோடு, “தங்கச்சி ரொம்ப பசிக்குது. ஏதாவது சாப்பிட போடு?” என்று உரிமையோடு கேட்பார் நானும் அவருக்கு பிடித்த உணவை சமைத்து பரிமாறுவேன். அப்படி சில வருடங்கள் பழக்கத்துக்கு பிறகு ஒரு நாள் என்னையும் கட்டுப்படுத்த முடியாமல்,
“அண்ணா, உங்களுக்குனு ஒருத்திய கட்டிகிட்டா, வாய்க்கு ருசியா 3 வேளையும் சமைச்சு போடுவா. வீட்டுக்கு களைப்போ போனா உங்களை அன்பா பார்த்துப்பா, பழசை மறந்துட்டுட்டு புது வாழ்க்கையை தொடங்குங்க அண்ணா, என் வீட்டுக்காரர் உங்க கிட்டே அதை பத்தி பேசாதேனு சொன்னாலும் எனக்கு மனசு கேட்கலனா..“ என்று கண்ணை கசக்கி கொண்டு சொன்னபோது, கலங்கிய அரவிந்த் அண்ணா நானே எதிர்பாராமல்,
“நீ சொல்றது சரிதாம்மா. எனக்கும் இந்த தனிமை கஷ்டமாத்தான் இருக்கு. அப்போ அது தான் தீர்வுனு நினைச்சு ரவி என் வீட்டோட சேர்ந்து பார்த்த பொண்ணை கூட வேண்டாம்னு சொல்லி அவங்க மனசை காயப்படுத்திட்டேன். ஆனா இப்போ ஃபீல் பண்றேன். ஆனா இனிமே நீயே பொண்ணு பார்த்து கட்டிக்கோங்கணு சொன்னா, கூட மறுக்கமாட்டேன்?” என்று சொல்லிவிட்டு, அரவிந்த் அண்ணா விருட்டென்று எழுந்து கையை கழுவிட்டு வீட்டை விட்ட கிளம்பினார்.
நான் கண்களை துடைத்து விட்டு ஆனந்தத்தில் துள்ளி குதித்தேன். என் கணவரிடம் போன் போட முயன்று வேண்டாம் அவரு டென்ஷன்ல இருந்தா எல்லாம் பாழாகிடும் என்று இரவு என் கணவர் ரவி வரும் வரை பொறுமையாக இருந்து இதை சொன்ன போது, என் கணவர் என்னை நம்ப முடியாமல் சந்தோஷத்தோடு என்னை கட்டிக்கொண்டார். உடனே நான் களத்தில் இறங்கி என் உறவுக்கார பொண்ணை அரவிந்த் அண்ணாவுக்கு கட்டி வைத்தேன். 1 மாதம் வரை இருவரும் இன்பமாக வாழ்ந்தனர். அப்போது நான் கட்டி வைத்த என் உறவுக்கார பெண் சுமதிக்கு கிறுக்கி பிடித்தது.
அவள் அரவிந்திடம், அப்பாவிடம் எவ்வளவு பணம் என்றாலும் வாங்கித் தருகிறேன். பார்ட்னர் நிறுவனத்தை விட்டு தனியாக ஒரு நிறுவனத்தை ஆரம்பியுங்கள். நாம தனியா சம்பாதிச்சு சந்தோஷமா இருக்கலாம் என்று பிரிவினை கோடு போட முயல, அதே கேட்ட அரவிந்த் அண்ணா அவர் கண்ணத்தில் பளார் என்று அறைந்து இருக்கிறார். அன்றே பெட்டியை தூக்கி கொண்டு புகுந்த வீட்டிற்கு போனவள் தான் பிறகு டைவர்ஸ் நோட்டீஸை அனுப்பனாள்.
நாங்கள் காலில் விழாத குறையாக சமரசம் செய்து வைக்க போனபோதெல்லாம் அவள் வீட்டில், நான் தான் திருமணம் செய்து வைத்தேன் என்பதை கூட யோசிக்காமல், எல்லாத்துக்கும் காரணம் நானும் என் புருஷனும் தான் என்பது போல் பேச, அரவிந்த் உடனே அவளை டைவர்ஸ் செய்து விட்டு தொழிலை கவனிக்க ஆரம்பித்தார்.
ஆனால் போலீஸ் ஸ்டேஷன், கோர்ட் என்று போய் தொழிலை கவனிக்க முடியாமல் நஷ்டம் ஏற்பட்டது. கணவர் அந்த மனஉளைச்சலில் டிரைவிங்கில் போகும் போதே, ஹார்ட் அட்டாக்கில் வண்டியை மரத்தில் மோதி இறந்து போனார். நானும் பிள்ளைகளும் ஆனாதை ஆனோம். அப்போது ஒரே ஆறுதல் அரவிந்த் அண்ணா மட்டும் தான்.
அதற்கு பிறகு ஒரு நல்ல நாளில் நான் கோவிலில் வைத்து அண்ணாவிடம், சேர்ந்து வாழும் ஆசையைச் சொல்ல அவரும் ஏற்றுக் கொண்டார். இப்போது அவர் எனக்கு கணவர். மாமா என்று வாயார கூப்பிட்டு பழகிய என் பிள்ளைகள் இன்றும் அவரை அப்படித்தான் கூப்பிடுகிறார்கள். அதே போல் அண்ணா என்று அழைப்பதை மட்டும் இன்று வரை என்னாலும் நிறுத்த முடியவில்லை. அது கட்டிலில் கட்டிப்பிடிப்பதை வரை தொடர்கிறது. ஆனால் அன்போடு அணைத்துக் கொண்டு அதே அண்ணா, தங்கையாக காதலும், காமமும் திளைக்க வாழ ஆரம்பித்து இருக்கிறோம்.
நன்றி..!