பூச் சூடிய பூவை – 10

” அறிவுக்கு புரியுது ராது. ஆனா என் மனசுக்குத்தான் புரிய மாட்டேங்குது.. ”

” சொல்ற மாதிரி சொன்னா எல்லாம் புரியும்.”

” இல்லையே.. உங்களை எனக்கே சொந்தமாக்கிக்கணும்னு துடியா துடிக்குதே.. ”

சட்டென இரண்டு கைகளையும் கூப்பியபடி சொன்னாள்.
” தயவு செய்து என்னை புரிஞ்சுக்கோங்க ப்ளீஸ். ! நடந்தவரை போதும். எனக்கு எந்த வருத்தமும் இல்லை. என் நண்பனுக்காகனு நெனைச்சிக்கறேன். ஆனா இதுக்கு மேல வேண்டாம்.. !!”

அவள் கெஞ்சல் உண்மையாக இருந்தது.

” ப்ளீஸ்.. கை எல்லாம் எடுத்து கும்பிட்டு என்னை குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்காதிங்க.. ராது..!! எனக்கு உங்களை புரியுது. ஏனோ.. என்னாலதான்.. கண்ட்ரோல் பண்ணிக்க முடியல.. !!”

அவள் திரும்பி தொட்டிலில் தூங்கும் குழந்தையைப் பார்த்தாள். நான் மெதுவாக எழுந்து வெளியே சென்றேன். பாத்ரூம் சென்று முகம் கழுவி மீண்டும் உள்ளே போனேன். ராதிகா கிச்சனில் புட்டி பால் கலக்கிக் கொண்டிருந்தாள்.

” ராது ” மெல்ல அழைத்தேன்.

திரும்பிப் பார்த்தாள்.

” எனக்கு டயர்டா இருக்கு ராது..! நான் கொஞ்ச நேரம் தூங்கட்டுமா.. ?”

” ம்ம் ” புன்னகைத்தாள்.

” நீங்க தூங்குவிங்களா ?”

” பாப்பா முழிச்சிட்டா.. அவ்வளவுதான். ! நான் தூங்க முடியாது ”

நான் மெதுவாக கிச்சனுக்குள் நுழைந்தேன். அவள் கொஞ்சம் மிரண்டு என்னைப் பார்த்தாள்.
” எ.. என்ன வேணும்.. ?”

” பயப்படாதிங்க.. உங்களை ஒண்ணும் பண்ணல..”

அவள் பார்வையில் இருந்த பயம் போகவில்லை. அவள் பக்கத்தில் போய் நின்று மெதுவாகச் சொன்னேன்.
” என்ன பண்றதுனே எனக்கு புரியல.. !”

” ஏன்.. ?”

” செத்துரலாம் போலருக்கு..”

அவள் முகம் அதிர்ந்தது.
” ஏன். ?” பதறிக் கேட்டாள்.

” அவ்வளவு வலியா இருக்கு.. உள்ள.. ! தாங்கவே முடியல.. !!”

” கடவுளே… ”பரிதவித்தாள்.

” ஸாரி ராது. என் வேதனைய போக்க வழி தெரியாமத்தான்.. உங்களை ரொம்ப கஷ்டப் படுத்திட்டேன்.. ”

” பரவால.. ! கொஞ்ச நேரம் போய் தூங்குங்க…! மனசு சரியாகிரும்.. !”

” இல்லங்க.. அதெல்லாம் சரியாகாது.. ”

” அப்படி சொல்லாதிங்க.. ! போய் படுங்க ப்ளீஸ்.. ”

மெல்ல அவள் கையை பிடித்து உயர்த்தி.. மென்மையாக முத்தம் கொடுத்தேன்.
” ஐ லவ் யூ ராது..”

” ப்ளீஸ் போய் கொஞ்ச நேரம் தூங்குங்க.. ”

அவள் கையை விட்டு திரும்பிச் சென்று கட்டிலில் படுத்தேன். அவள் புட்டியுடன் வந்து.. தொட்டிலை விலக்கி தூக்கத்தில் இருக்கும் குழந்தைக்கு அப்படியே வாயில் திணித்து விட்டாள். அதை கொஞ்சினாள். அதைப் பார்த்த எனக்கு கண்கள் கொஞ்சம் கலங்கியது. அவள் என்னைப் பார்த்தாள்.!
” ப்ளீஸ்.. தூங்க முயற்சி பண்ணுங்க..”

நான் ஒரு பெருமூச்சு விட்டு கண்களை மூடினேன். என் கண்ணீர் உள்ளேயே அடங்கியது. என் இதயம் கணத்து விட்டதைப் போலிருக்க.. அப்படியே கண்களை மூடிக்கொண்டேன்.. !!

நான் மீண்டும் விழித்த போது குழந்தை தரையில் விளையாடிக் கொண்டிருந்தது. ராதிகா டிவியைப் பார்த்தபடி வெங்காயம் உழித்துக் கொண்டிருந்தாள். நான் எழுந்து விட்டதைப் பார்த்து..
” நல்லா தூங்கினிங்களா ?” என்று மெல்லிய புன்னகையுடன் கேட்டாள்.

” ம்ம்.. ” தலையை ஆட்டி விட்டு எழுந்து பாத்ரூம் சென்று முகம் கழுவி வந்தேன்.

” காபி வெக்கட்டுமா ?” ராதிகா கேட்டாள்.

நான் அவள் பக்கத்தில் நெருங்கி.. பின்னால் சென்று குனிந்து.. அவள் முகத்தை என் கைகளில் பிடித்து நிமிர்த்தினேன். அவள் உடம்பு பதட்டத்தை அடைய..
” ரிலாக்ஸ் ப்ளீஸ்..” என்று விட்டு அவள் கன்னத்தில் அழுத்தி முத்தம் கொடுத்தேன்.

”வேணாம்.. ப்ளீஸ்.. ” என்று என் கைகளை தள்ளி விலக்கி எழுந்தாள் ராதிகா.

அவள் குழந்தை.. தன் விளையாட்டை மறந்து.. எங்களை ஆவலாகப் பார்த்துக் கொண்டிருந்தது …… !!!!!!

– சொல்லுவேன் ……. !!!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *