வசந்த காலம் – 12 Like

அவள் அப்பா வந்து என் அப்பாவிடம் பேசினார் பின்பு எங்கள் அனைவரின் பேரையும் சொல்லி நலம் விசாரித்தார் எனக்கும் என் தங்கைக்கும் ஆச்சரியம் இவருக்கு எப்படி எங்கள் பெயர் தெரியும் என்று ஆனால் அக்காவோ சிரிப்பை செலுத்தி விட்டு மாமா எப்படி இருக்கீங்க கனடாவில் இருந்து எப்போ வந்தீங்க அத்தை திவி எல்லாம் எப்படி இருக்காங்க என்று விசாரித்தால். பிறகு தான் தெரிந்தது அவர் கனடாவில் செட்டில் ஆகிவிட்ட என் தாய் மாமா என்று. அப்படி என்றால் எனக்கு சொந்தமானதை தான் இவ்வளவு நேரம் வேடிக்கை பார்த்தோமா என்று என்னை நானே கடிந்து கொண்டேன் பின் அக்காவிடம் யார் அது திவி என்றேன் அவளோ டேய் மாமா பொண்ணு டா மறந்துட்டியா சின்ன வயசுல அவா கூட தானே சுத்துவ விளையாடுவ என்றால் நானோ இல்லக்கா ஞாபகம் இல்ல என்றேன் உடனே மாமா அவனுக்கு

அப்போ 5 வயசு மா எப்படி ஞாபகம் இருக்கும் என்னையே தெரியலையே என்றார். இல்லை மாமா உங்களை ஆல்பத்துல பாத்துருக்கேன் மாமானு சொன்னதும் ஞாபகம் வந்துடுச்சு ஆனா திவி யாருன்னு தெரியலையே என்றேன். இரு அவளும் வந்துருக்கா அவளுக்கும் உன் வயசு தான் கனடாவில் 12 த் முடிச்சிட்டா (அங்கே நம்மை விட 6 மாதம் முன்னரே பள்ளி முடிந்திடுமாம்) இரு காட்டுறேன் என்றார் இவ்வளுவு நேரம் உங்க பொண்ண தானே பாத்தோம் என்று நினைத்துக்கொண்டேன். பிறகு அவர் அழைக்க திவி வந்தாள் அனைவரையும் காட்டி யார்னு தெரியுதா என்றார். அவளோ அது மாமா தெரியுது பா போட்டோ ல பாத்துருக்கேன் இது அவங்க பசங்களா என்று கேட்டாள் ஆமாம் திவி இது நித்யா இது கண்ணன் இது ப்ரியா என்று மூணு பேரையும் காட்டினார். உனக்கு கண்ணனை தெரியலையா சின்ன வயசுல

எப்பவும் அவன் கூட தானே இருப்ப என்றார் உடனே ஓஓ கண்ணனா இது எவ்வளவு மாரிட்டான் சின்ன வயசுல நல்ல துரு துருன்னு இருப்பான் இப்போ கொஞ்சம் அசமந்தம் ஆகிட்டான் போல என்றாள். ஏன் அப்படி சொல்லறீங்க என்று கேட்டேன் ஆமாம் அப்போலாம் என்ன பாத்தாலே ஓடிவந்து கட்டி புடிச்சு முத்தம் கொடுப்ப கூட்டிகிட்டு பொய் ஊற சுத்தி காட்டுவ உன் பிரண்ட்ஸ் எல்லார்கிட்டயும் பாரு என் ஆளுன்னு இன்றோ கொடுப்ப இப்போ வந்து இவ்ளோ நேரம் ஆகியும் பேச கூட மாட்டிக்கிற யாரோ மாதிரி நீங்க வாங்கன்னு சொல்ற என்றாள். சத்தியமாக எனக்கு எதுவுமே ஞாபகம் இல்லை உங்க முழு பேர் கூட தெரியல என்றேன் நான் உடனே அவளோ அடப்பாவி 12 வருஷத்துல உன் ஆளையே மறந்துட்டியா திவி டா உன் திவ்யதர்ஷினி என்றாள். நானோ இல்லை பா எனக்கு எதுவும் ஞாபகம் இல்லை என்றேன் உன்னை எங்கோ பாத்த மாதிரி மட்டும் திகான் இருக்கு ப்ரியாகிட்ட கூட அப்பத காட்டி சொன்னேன் ஆனா யாருன்னு
தெரியலை என்றேன். அடா பாவி என்ன மொத்தமாவே மறந்துட்டியா இங்க வந்தா உண்ண பாக்கலாம்னு தான் வந்தேன் நீயே தெரியாதுன்னு சொல்றியே போடா என்று முகம் சுருங்கினால் இல்லை ப்பா இதுக்கு போய் கோச்சிக்கிற இனி தெரிஞ்சிக்கலாம் அடிகடிப் பேசினா தானே ஞாபகம் இருக்கும் 12 வருஷம் கழிச்சு திடீர்னு பாத்தா எப்படி ஞாபகம் இருக்கும் என்றேன். அவளோ நான் ஞாபகம் வச்சிறுகனே டா நீ சொன்ன ஒவ்வொரு விஷயம் செஞ்ச எல்லா விஷயம் ஞாபகம் இருக்கு எனக்கு சரி என்னை தெரியலை நான் வலந்துட்டேன் ஆனா நம்ம பேசி பழகுணதை கூட மறந்துடியே என்று கூற. சரி திவ்யா அளாதா இனிமே பேசலாம் என்ன ஆகிடுச்சு என்றேன் ஆனாலும் இதே என் பழைய கண்ணனா இருந்தா கட்டி புடிச்சிருப்பான் ஊர் சுத்தி காட்டிருப்பான் என்றாள். ஹாஹா என்ன பண்றது திவி வலந்துட்டேனே என்றேன்

பாரு நீ முன்னலாம் என்ன பேர் சொல்லி கூட கூப்பிட மாட்ட இப்போ எண்ணனா யாரோ மாதிரி பேசுற போடா நீ ரொம்ப மோசம் என்று உரிமையா கோச்சுக்கிட்டா உடனே அக்கா உள்ளெ மறித்து ஆமா என் தம்பி இன்னொரு பொண்ண பத்தி நெனச்சு கூட பாக்காத அளவுக்கு வளத்துருக்கோம் அதான் உண்ண கூட ஞாபகம் இல்லை வந்து இவ்வளவு நேரம் ஆச்சு நீ என்கிட்ட பேசுனியா என் தங்கச்சியை தெரிவாச்சும் செய்யுமா என்று அவள் கேட்க இல்லை மதினி இவனை பாக்கலாம் னு தான் ஆசையா வந்தேன் ப்ரியாக்கு நான் ஊறவிட்டு போகும்போது 1 வயசு தானே எப்படி எனக்கு தெரியும் உங்ககிட்ட கூட

மதினி ன்னு அளவாதான் பலகுனேன் இவன்கிட்ட அப்படியா இருந்தேன் உங்களுக்கே தெரியும்ல எனக்கு இவனை எவ்வளவு பிடிக்கும்னு இப்போ யாருன்னே தெரியலைன்னு சொல்றான் என்றாள். உடனே சரி விடிங்க மதினி இதுக்கெல்லாம் கோசிப்பீங்களா இனி உங்களை என் அண்ணன் மறக்கவே மாட்டான் என்று என் தங்கை கூறினால் இப்படியாக அன்று மீதி பொழுது அவளுடனே சென்றது. அவளும் என்னிடம் பழைய விஷயங்கள் அனைத்தையும் கூறினால் அவளது கனடா வாழ்க்கை பற்றியும் என்னுடைய வாழ்க்கையும் பகிர்ந்து கொண்டோம் அவளை பற்றி முழுவதுமாக தெரிந்துகொண்டேன் என் குழந்தை பருவம் பற்றியும் _தொடரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *