சுவாதி எப்போதும் என் காதலி -18 Like

உங்க வீட்ல எதுவுமே சொல்லலையா என்றாள் ரெஜினா .

சொன்னங்க அவங்க வீட்ல சொன்னங்க ஏண்டா ஒரு அனாதை பொண்ணு எந்த சாதின்னே தெரியாத பொண்ண கல்யாணம் பண்ண போறேன்னு சொல்றன்னு அவங்க வீட்ல திட்டினாங்க ஆனா இவர் தான் அவங்க முன்னாடி என்னைய விட்டு கொடுக்கல இத்தனைக்கும் அவங்க அப்பா அம்மா செத்துடுவேன்னு மிரட்டியும் இவரு அத கண்டுக்கல என்னைய அவ நம்பி 8 வருசமா லவ் பண்றா அவள நான் கை விட மாட்டேன்னு சொல்லி அன்னைக்கு என்னைய ரிஜிஸ்டர் மேரேஜ் பண் ண கூப்பிட்டு போனார் .நான் தான் முதல ரெண்டு பேரும் சேர்ந்து குழந்தை பெத்துக்குவோம் அப்புறம் மேரேஜ் பண்ணுவோம்னு சொல்லிட்டேன் என்றாள் சுவாதி .

ஏங்க அப்படி சொன்னிங்க என கேட்டாள் ரெஜினா .நான் ஒரு அநாதை என் கல்யாணத்து அப்ப எனக்குன்னு ஒரு சொந்தம் வேணும்னு நினைச்சேன் இப்ப அந்த சொந்தம் கிடைச்சுடுச்சு இனி நாங்க ரெண்டு பேரும் எங்க குழந்தையோட கல்யாண போட்டோல இருப்போம் .யோசிச்சு பாருங்க இன்னும் ஒரு 20 வருஷம் கழிச்சு போட்டோ பாக்கும் போது எங்க மகனும் என் கல்யாணத்து அன்னைக்கு எங்களோட ஒரு குட்டி பையனா இருந்தான் சொல்லும் போதே எவளவு அழகா இருக்கு என்றாள் சுவாதி .

எஸ் ரொம்ப நல்லா இருக்கு என்றாள் ரெஜினா .விக்கி இவள் ஏன் இப்படி பண்ணுகிறாள் என்று நினைத்து கொண்டு நெளிந்து கொண்டு இருந்தான் .எந்திரித்து போகலாம் என்று நினைத்தாள் சுவாதி இறுக்கமாக கையை பிடித்து இருந்தாள் .

உண்மைலே நீங்க ஒரு வித்தியாசமான ஜோடி தாங்க என்றாள் ரெஜினா .இல்ல நாங்களும் சாதராண ஜோடி தான் ஆனா இத ஸ்பெசல் ஆக்கினதுக்கு இவருக்கு தான் தேங்க்ஸ் சொல்லணும் என்ன டியர் என்று சொல்லி பட் என்று விக்கியின் கன்னத்தில் ஒரு சின்ன முத்தமிட்டாள் சுவாதி .இதை விக்கி எதிர்பார்க்கவே இல்லை .பின் என்னைய மாதிரி அனாதைய இவரு எத்துகிட்டதுக்கு இவருக்கு நான் வாழ்நாள் புராவும் அடிமை இருக்கலாம் என்று விக்கியை பார்த்து சொல்லி கொண்டே மெல்ல கண்ணீர் விட்டாள் .

அவள் கண்ணீர் விடுவதை பார்த்து வள்ளி ஏதோ பிரச்சினை போல என்று வந்தாள் .என்ன ஆச்சு எதுவும் பிரச்சினையா என்றாள் வள்ளி .இல்ல அவங்க ஆனந்த கண்ணீர் தான் விடுறாங்க ஒன்னும் பிரச்சனை இல்ல என்றால் ரெஜினா .ஓகே ஓகே பங்கசன் ஆரம்பிக்க போகுது வாங்க இத முடிசுக்கிவோம் அப்புறம் நம்ம மட்டும் இருந்து கூட விடிய விடிய பேசலாம் என்று வள்ளி சொன்னாள் .சுவாதி குழந்தையை தோளில் போட்டு கொண்டு விக்கியின் கையை பிடித்து கொண்டே எழுந்து நின்றாள் .

பின் மணி குழந்தைக்கு பேர் வைத்து விட்டு டேவிட்டை கூப்பிட்டு சொல்ல சொன்னான் ,அவனும் குழந்தை காதில் சொல்லி அதன் வாயில் சர்க்கரை தண்ணீர் விட்டான் .பின் அவன் மனைவியும் அதே போல் செய்ய வள்ளி விக்கியை கூப்பிட்டால் அவன் மணியை பார்க்க அவன் பிடிக்காதாது போல் இருக்க அதை புரிந்து கொண்ட விக்கி யே போதும் சிஸ் எல்லாரும் இப்படி பேர் சொல்லி சீனி தண்ணி உத்துனா அப்புறம் உன் குழந்தை இப்பவே சக்கரை நோய் வந்துடும் என்றான் சிரித்து கொண்டே ,அதை கேட்டு மற்றவர்களும் சிரிக்க இருந்தாலும் தம்பி சொல்றதும் சரி தான் நிறைய குழந்தைக்கு சீனி தண்ணி கொடுக்க வேணாம் மத்த படி வந்தவங்களுக்கு சாப்பாடு போடும்மா என்று வள்ளியின் அம்மா சொல்ல எல்லாரும் சாப்பிட்டு கொண்டே ஒருவருக்கு ஒருவர் சாப்பிட ஆரம்பித்தனர் .

சுவாதி சாப்பிடமால் இருப்பதை பார்த்த வள்ளி ஏண்டி இன்னும் சாப்பிடல நல்லா இல்லையா என்றாள் வள்ளி .இல்ல இன்னைக்கு கொஞ்சம் லேட்டா எந்திரிச்சேன் அதான் விக்கி எனக்குன்னு பிஸ் பிரியாணி வாங்கி கொடுத்துட்டான் அதான் சாப்பிட முடியல என்றாள் .ம்ம் என்னால நம்ம விக்கிய நம்பவே முடியலடி என்றாள் .சரி அது இருக்கட்டும் இங்க வா இவனுக்கு பால் கொடுக்கணும் ரூம் எங்க இருக்கு என்றாள் சுவாதி

ஒரு நிமிஷம் என்று அவள் சுவாதியை கூப்பிட்டு போயி அவர்கள் வீட்டின் இன்னொரு பெட் ரூமை காட்டினாள் பின் அங்கே பால் குழந்தைக்கு கொடுத்து விட்டு குழந்தையை அங்கு இருக்கும் கட்டிலில் தூங்க வைத்தாள் .எதையோ யோசித்து கொண்டே இருந்தால் .அந்த ரூமை பார்த்த போது அங்கு ஒரு சன்னல் திறந்த போது தான் தெரிந்தது அந்த சன்னலக்கு நேர் வாஸ் பேசின் இருப்பது பின் விக்கிக்கு மெசேஜ் அனுப்பினால் வா நான் உன் கிட்ட முக்கியமான விஷயம் சொல்லணும் என்று .

விக்கி வந்தான் ,விக்கி வந்தான் ,என்ன சுவாதி என்ன விசயம் என்று கேட்டான் ,இல்ல விக்கி நான் பண்ணதுல உனக்கு கோபம் ஒன்னும் இல்லையே என்றாள் .என்ன சொல்ல நீ வந்து என்று விக்கி சொல்லி கொண்டு இருந்த அதே நேரத்தில் சன்னலுக்கு நேரே முதலில் ரெஜினா வர இதான் சமயம் என்று விக்கியை சட்டையை பிடித்து இழுத்து ஒரே தடவையில் அவன் உதட்டை கவ்வினாள் .விக்கி முதலில் அதை எதிர்பார்க்கவில்லை அதனால் அவன் விடுபட நினைத்தான் ,

ஆனால் சுவாதி அவன் முதுகை இறுக்கமாக பிடிக்க மேலும் அவன் உதட்டை விடமால் கவ்வ அவனால் முடியவில்லை .முதலில் அவள் உதடு அப்போது சாப்பிட்ட மீன் வாடை அவனுக்கு ஒரு மாதிரி குமட்டுவது போல் இருக்க ஆனால் தொடர்ந்து அவள் விடமால் உதட்டை கவ்வ அந்த வாடை மறந்து அவள் மென்மையான உதடுகள் மட்டும் தான் தெரிந்தது .இருவரும் ஒருவருக்கு ஒருவர் விடமால் சப்பி கொண்டு இருந்தனர் .

ரேஜினாவிற்கு பின் டேவிட்ம் வர எங்க என்ன இதுக பொது இடத்துல இப்படி பன்னுதுக என்று அவள் சொல்ல டேவிட் அந்த சன்னல் வழியே பார்க்க அவனுக்கு கோபம் தலைக்கு ஏறியது .விக்கி சுவாதி அவர்களை கடுப்பேற்ற தான் இப்படி பண்ணுகிறாள் என்று தெரியமால் அவள் உதட்டை காதலோடு சப்பி கொண்டே நினைத்தான் ,போதும்டா கிஸ் அடிச்சது அவ முகத்த பாத்து ஐ லவ் யு சொல்லுடா இன்னைக்கோட இந்த கத முடியட்டும் என்று நினைத்து கொண்டே அவன் மெல்ல அவள் உதடுகளில் இருந்து விலகி அவளை பார்க்க அவள் அவனை பார்க்கமால் உடனே வெளியே கதவை திறந்து வெளியே செல்ல அப்போது தான் பார்த்தான் விக்கி டேவிட் வாஸ் பேசினில் கை கழுவி விட்டு போவதை அடி பாவி இதான் உன் பிளானா உன் னைய என்னமோன்னு நினைச்சேன் கடைசில நீயும் மத்த பொண்ணுக மாதிரி தாங்கிறத நிருபிசுட்டியேடி இன்னைக்கு வீட்டுக்கு வாடி உன்னைய கொள்றேன் என்று நினைத்து கொண்டே ரூமை விட்டு வெளியேறினான் .
வெளியேறும் போது உதட்டில் எதுவும் ஒட்டி இருக்கிறதா என்று உதட்டை துடைத்து கொண்டே வெளியேற அதை மணி பார்த்து விட்டு ஒரு மாதிரி விக்கியை கேவலாமாக முறைத்தான் .பின்னர் விக்கி வெளியேறி சேரில் உக்கார அங்கு வந்த சிறுவர்கள் எல்லாம் ஏதாவது பாட ஆட என்று பார்பாம் பண்ண பெற்றோர்கள் எல்லாம் உக்காந்தனர் விக்கி ஒரு ஒரமாக கடைசியில் தனியாக உக்காந்து இருந்தான் .ஒரு பத்து நொடியில் சுவாதியும் கையில் குழந்தையோடு வந்து உக்காந்தாள் .

அதன் பின் எல்லாரும் குழந்தைகள் பண்ணுவதை ரசித்து ரசித்து சிரித்து கொண்டு இருந்தனர் ,விக்கி அதை கண்டு கொள்ளவில்லை அவன் மொபைல் நொண்டி கொண்டு இருந்தான் .பின் சில நொடிகளில் சுவாதி அவன் தோளில் சாய்ந்தாள் .பாருடா இப்ப தான் டேவிட் கண்ணுல படுற மாதிரி இல்லையே அப்புறம் ஏன் ஆக்டிங் கொடுக்குறா இவள என்று நினைத்து கொண்டு அவளை எழுப்பலாம் என்று பார்க்க அவள் உண்மைலே தூங்குவது தெரிய அவளை அப்படியே விட்டு விட்டான் ,

சிறிது நேரம் அமைதியாக இருந்தான் ,திரும்ப திரும்ப அவளையே பார்த்தான் .அவள் கையில் இருப்பது குழந்தையா இல்லை இவள் குழந்தையா என்று அவனுக்கு தோன்றியது ,ஆனால் அந்த தூக்கத்திலும் தன் மகனை இறுக்கமாக பிடித்து இருந்தாள் சுவாதி ,

விக்கிக்கு ஏதோ ஒரு உணர்வு அவள் தோளில் சாய்ந்து உறங்கும் போது தோன்றியது ,அந்த உணர்வு ஒரு இருபது வினாடிகளுக்கு முன்னாடி இவளே வலுக்கட்டாயமாக உதட்டில் முத்தம் கொடுத்த போது ஏற்ப்பட்ட உணர்வை விட நன்றாக இருந்தது ,முத்தம் அவன் உடலுக்கு மட்டும் தான் சுகத்தை தந்தது .ஆனால் இதுவோ அவன் மனதிற்கு சுகம் தந்தது ,நம் தோளில் சாயவும் ஒரு ஜீவன் இருக்கிறது என்று எண்ணி சந்தோசப்பட்டான் .

பங்கசன் எல்லாம் முடிந்து எல்லாம் ஒருவர் ஒருவராக வீட்டிற்கு கிளம்பி கொண்டு இருந்தனர் .விக்கி சுவாதியை எழுப்ப பிடிக்கமால் அப்படியே உக்காந்து மனதளவில் ரசித்து கொண்டு இருந்தான் ,எல்லாரும் இடத்தை காலி செய்து விட்டார்கள் .ஏன் இது வரை மணியோடும் வள்ளியோடும் பேசி கொண்டு இருந்த டேவிட்ம் அவன் மனைவியும் கூட கிளம்பி கொண்டு இருந்தார்கள் ,

ரெஜினா போகும் போது மெல்ல என்ன இப்படி தூங்குரங்க என்றாள் .நைட் முழுக்க பையன் அழுதான் இவ நேத்து நைட் தூங்கல அதான் இப்படி தூங்குரா என்றான் ,சரி தூங்கட்டும் அவங்கள கேட்டதா சொல்லுங்க ஒரு நாள் ரெண்டு பேரும் எங்க வீட்டுக்கு சாப்பிட வாங்க என்று அவள் சொல்லி விட்டு போக டேவிட்ம் மனைவி இருப்பதால் பேருக்கு விக்கியை பார்த்து நான் வரேண்டா என்று சொல்லி விட்டு சென்றான் ,

வள்ளி வந்தாள் .ஹ எளுப்பிடாத என்னோட ரெண்டு செல்லங்கலும் தூங்கட்டும் பாவம் என்றான் .பாருடா செல்லங்கலாம் ம்ம் சரி தூங்கட்டும் அதுக்குன்னு இப்படியேவா நான் வேணும்னா பெட் ரெடி பண்ணி தரேன் அதுல தூங்கிட்டு காலைல எந்திரிச்சு 2 பேரும் சாரி 3 பேரும் போங்க என்றாள் .ஒன்னும் வேணாம் இவ இப்படி தூங்குரது தான் எனக்கு பிடிச்சு இருக்கு என்று தோளில் சாய்ந்து தூங்கி கொண்டு இருந்தவள் தலையில் செல்லமாக ஒரு முத்தம் கொடுத்தான் .

உடனே அவள் எழுந்து விட்டாள் ,தூக்க கலக்கத்தோடு விக்கி மணி என்ன என்றாள் .ம்ம் மணி அடுத்த நாள் காலைல 11 மணி ஏண்டி என்ன ஆச்சு சாயங்கலாம் 6.30க்கு எல்லாம் இப்படி தூங்குர என்று வள்ளி கேட்டாள் .நைட்டு இவன் அழுது கிட்டே இருந்தான் அதான் சரியா நைட்டு தூங்கல என்றாள் .சரி இப்ப என்னடி தூங்கிட்டு காலைல எந்திருச்சு போடி என்றாள் வள்ளி ,ஐயோ வீட்ட்ல எல்லாம் அப்படியே இருக்குடி போயி பாத்திரம் விளக்கனும் இவரோட துனிகள துவைக்கணும் நிறைய வேலை இருக்கு நான் கிளம்பனும் என்றாள் .

சரிடி பாத்து போயிட்டு வா என்று சொல்லி விட்டு மருமகனே போயிட்டு வாங்க என்று குழந்தையையும் கொஞ்ச சரிடி அம்மா போனதுக்கு அப்புறம் ஒரு நாள் வரேன் நிறைய பேசணும் என்றாள் வள்ளி ,பின் விக்கியும் சொல்லி கொண்டு இருவரும் வெளியே சென்றார்கள் .

காரில் ஏறும் முன் சுவாதி ஐ அம் சாரி விக்கி வேணும்னே டேவிட் கடுப்பேத்த உன்னைய உள்ள கிஸ் அடிச்சதுக்கு நீ வேணும்னா வழக்கம் போல என்னைய திட்டிக்கோ என்று அவள் இன்னும் உறக்க கலக்கம் மாறமால் சொல்ல நீ எப்பயுமே குழந்தை தாண்டி உன்னைய ஏன் நான் திட்டனும் என்று நினைத்து கொண்டு ம்ம் நான் உன்னைய கிஸ் அடிச்சது கூட தப்புன்னு சொல்ல மாட்டேன்

அப்புறம் என்றாள் சுவாதி ,உன் உதட்டுல மீன் வாடை அடிச்சது அதுக்கு தான் உன்னைய இப்ப திட்ட போறேன் என்று விக்கி சிரித்து கொண்டு சொல்ல சுவாதியும் சிரித்து கொண்டே உள்ளே ஏறினாள் .பின் வழக்கம் போல் காரை எடுக்கும் முன் கண்ணாடியில் சுவாதியின் கண்களை பார்த்து விட்டு ரேடியோ ஆன் செய்தான்

உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே என்று பாடல் ஓட விக்கி ஒரு முறை சுவாதியையும் கண்ணாடியில் பார்த்து கொண்டு ரசித்து கொண்டே ஓட்டினான்

தொடர்புக்கு..

ஆதரவுக்கு நன்றி…????????

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *