நீ பண்ண பல மிஸ்டேக்ஸ் அவர் பொறுப்பு எத்து கிட்டு சிங் கிட்ட பல தடவ திட்டு வாங்கி இருக்காரு. உன் பேரெண்ட்ஸ் மும்பை வர அவர் காசு போட்டு பிளைட் டிக்கெட் எடுத்து இருக்காரு ஏன் இந்த வேலை உனக்கு கிடைச்சதுக்கு காரணமே அவர் தான் சரி நீ எப்படியும் இரு நான் போயி அவர பாத்துட்டு வரேன் என்று வருண் கிளம்பினான். மணி ஏதோ குற்ற உணர்ச்சி ஆட்கொண்டான்.
வருண் கிளம்பி ஆஸ்பத்திரி போக அங்கு இன்னும் விக்கி சுயநினைவு திரும்பவில்லை. பின் வருண் டாக்டரிடம் விசாரித்து விட்டு கிளம்பினான். மாலை 3 மணி போல விக்கி எழுந்தான். எழுந்த உடனே அவன் சுவாதி சுவாதி என்றான். ஒரு நிமிஷம் சார் என்று நர்ஸ் சொல்லி விட்டு வெளியே சென்று வர
அஞ்சலி உள்ளே வந்தாள். என்ன மிஸ்டர் விக்னேஷ் எப்படி இருக்கீங்க என்றாள். பரவல மேடம் சுவாதிய எங்க என்றான். அவள் ஒரு பெரு மூச்சை விட்டு விட்டு விக்னேஷ் நான் சொல்றத கொஞ்சம் பொறுமையா கேளுங்க சுவாதி அவங்க அப்பா கூட போயிட்டா என்றாள். என்னது என்றான். ஆமா போயிட்டா என்றாள். எங்க போனா என்றான்.
தெரியல என்றாள். எதுக்கு போனா என்றான். அஞ்சலி அமைதியாக இருந்தாள். ஏன் போனா என்றான் அப்போதும் அமைதியாக இருந்தாள். சொல்லுங்க மேடம் ப்ளிஸ் என்றான். ஏன்னா அவளுக்கும் ஒரு சொந்தம் வேணும் ஒரு பாதுகாப்பு வேணும். அத அவங்க அப்பா தரேன்னு சொல்லி கூப்பிட்டு போயிட்டார்.
அது மட்டும் இல்லாம நீ என்ன அவளுக்கு புருசனா இல்லலே அட்லிஸ்ட் அவ லவ்வரா அப்புறம் ஏன் இத்தன கேள்வி கேக்குற அவளா இருந்த காலத்துல எல்லாம் எப்ப போவ எப்ப போவான்னு அவள தொல்லை பண்ணிட்டு இப்ப ஏன் போனான்னு கேக்குற அவ எதுக்கு போனான்னு எல்லாம் சொல்ல முடியாது உன்னைய இங்க கொண்டு வந்து சேத்துட்டு உன்னோட திங்க்ஸ் எல்லாம் கொடுத்துட்டு அவ அவங்க அப்பா கூட நேத்தே அமெரிக்கா போயிட்டா என்றாள்.
நீங்க சொல்றத என்னால நம்ப முடியலையே சுவாதிக்கு அவ அப்பா பிடிக்காதே என்றான். உனக்கு கூட தான் அவள பிடிக்கலன்னு சொல்லி இத்தன காலம் கூட இருந்த அது மாதிரி தான். இத பாரு விக்னேஷ் அவ போயிட்டா இப்ப அவ உன் வீட்ல இல்ல சரியா என்னைய எதுக்கு உக்கார வச்சானா பழகுன தோஷத்துக்கு உன்னோட திங்க்ஸ் உன் கிட்ட கொடுத்துட்டு அப்படியே உனக்கு வேலை வாங்கி தர சொன்னா இந்தா இதுல ஒரு கார்ட் இருக்கு உனக்கு உடம்பு சரியானதுக்கு அப்புறம் பெங்களூர் போயி இந்த கம்பெனில இண்டர்வியுவ் அட்டென் பண்ணு இவளவு தான் சொல்ல சொன்னா நான் வரேன் என்னைய விடுங்க என்று சொல்லி விட்டு போனாள்.
விக்கி தலையணையில் சாய்ந்து நிஜமாவே போயிட்டாளா இருக்காது நான் இப்பவே போயி வீட்ல பாக்கணும் என்று நினைத்து கொண்டு எழுந்தான். சார் நீங்க எந்திரிக்க கூடாது சார் என்று நர்ஸ் சொல்ல அவன் என் வோயிப் பாக்க போகணும் என்றான். சார் நாளைக்கு காலைல தான் போக முடியும் அது வரைக்கும் நீங்க ஆஸ்பத்திரள தான் இருக்கணும்.
ஓகே அட்லிஸ்ட் போன் ஆச்சும் தரின்களா என்றான். ஓகே சார் ஆனா இப்ப இல்ல சாயங்கலாம் பேசுங்க என்று சொல்லி விட்டு சென்றாள். விக்கி சே இதுக்கு இன்னும் மயக்கத்துலே இருந்து இருக்கலாம் என்று நினைத்து கொண்டு வருத்தப்பட்டான்.
பிறகு அன்று முழுதும் தனியாக இருந்து விட்டு யாருமே இல்லாமல் அன்று சாய்ங்காலம் அவனே சென்றான். பின் அவன் அட்மிட் ஆன அன்று போட்டு இருந்த உடையை அவனுக்கு கொடுத்தார்கள். அதை பார்த்தான். சட்டை முழுதும் ரத்த கரையாக இருந்தது. ம்ம் என்ன அடி சுவாதி நான் அடி வாங்குனப்ப எதுவும் சொன்னாளா இல்ல பாத்து கிட்டு மட்டும் இருந்தாளா ஒன்னும் தெரியல முத அடி ஒரு குண்டன் அடிச்சதும் கீழ விழுந்தென் அப்புறம் ஒன்னும் ஞாபகம் இல்ல.
அது சரி நான் என்ன படத்துல வர ஹீரோவா திரும்ப அடிக்கிறதுக்கு என்று நினைத்து கொண்டு வெளியே சென்று வேகமாக ஆட்டோ பிடித்து வீட்டிற்கு சென்றான். போனதும் வெளியே சுவாதியின் செருப்பு இல்லை. கதவை திறந்து பார்த்தான் வீடே வெறும் வீடாக இருந்தது. தைரியத்தை வர வைத்து கொண்டு சுவாதி ரூம் கதவை தட்டி பார்த்தான். பின் கதவை திறக்க அது திறந்து கொண்டது. உள்ளே சென்று பார்த்தான்.
உள்ளே சுவாதியும் இல்லை குழந்தையும் இல்லை அது மட்டும் இல்லாமல் சுவாதி சம்பந்த பட்ட எந்த பொருள்களும் இல்லை அதை பார்த்து விட்டு அப்படியே தலையில் கை வைத்து உக்காந்தான். பாவி ஏண்டி ஒரு சேலை கூட வைக்காம போன என்று அவன் நினைக்க அவனை அறியாமல் கண்ணில் கண்ணீர் வந்தது.
கண்களை துடைத்து கொண்டு நான் அழலால நான் அழ மாட்டேன். நான் ஏன் அழனும் இத தானே நான் விரும்பெனேன் அந்த மேடம் சொன்ன மாதிரி அவ இருந்த வரைக்கும் நான் அவ கிட்ட என் அன்ப வெளிப்படுத்தவே இல்லை இவளவு ஏன் அவ பிள்ளதாச்சியா இருந்தத்ப்ப கூட எனக்கு ஒல் கிடைக்கலன்னு அழுத ஒல் மாறி தான நானு தெரு பொருக்கி நான் விளங்கா பையன்
பாவம் அந்த பச்ச குழந்தை முகத்த பாத்து ஆச்சும் நான் திருந்தி இருக்க வேண்டாம். ஐயோ அது என் கண்ணு மூக்கு மாதிரியே அதுக்கும் இருந்துச்சே இவளவு ஏன் என் இடுப்புல இருக்க மாதிரி பெரிய மச்சம் அவன் இடுப்புளையும் இருந்துச்சே அது கூட என் விரல பிடிச்சு என்னைய விட்டு போகாதிங்க அப்பான்னு சொல்லுற மாதிரி பாத்துச்சே ஐயோ உனக்கு வேணும் என்று சொல்லி கொண்டு கண்ணாடியில் தன் முகத்தை பார்த்து கண்ணாடியில் துப்பினான்.
நாயே நீ எல்லாம் எதுக்கு உயிரோட இருக்க என்று சொல்லி கண்ணாடியை கையாலே உடைத்தான். ஒரு அரை மணி நேரம் அங்கேயே உக்காந்து அழுது கொண்டு இருந்தான். பின் களைப்பில் அதே ரூமில் தூங்கி விட்டான். அடுத்த நாள் எழுந்தான்.
ஹாலுக்கு வந்தான் கிச்சனை பார்த்தன் எப்போதும் இருக்கும் சுவாதி இல்லை. ம்ம் முடிஞ்சுடுச்சு எல்லாம் முடிஞ்சுடுச்சு நான் கூட ஹாப்பி எண்டிங்கா தான் முடியும்னு நினைச்சேன் இல்ல அதாலம் படத்துல மட்டும் தான் ஹாப்பி எண்டிங் என்று நினைத்து கொண்டு சட்டையை போட்டான். பார்க்கிற்கு சென்றான். சுவாதியுடன் ஒரு நாள் மழையில் நனைந்து கொண்டே பஜ்ஜி சாப்பிட்டது ஞாபகம் வந்தது.
பஜ்ஜி கடையை நோக்கி நடந்தான்.
தொடரும்.
ஆதரவுக்கு நன்றி…????????
தொடர்புக்கு.